விவேகி ராய்
விவேகி ராய் | |
---|---|
விவேகி ராய் | |
பிறப்பு | 19 நவம்பர் 1924 காசிப்புர், ஒன்றிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 22 நவம்பர் 2016 வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 92)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
விவேகி ராய் (Viveki Rai) (பிறப்பு: 1924 நவம்பர் 19 - இறப்பு: 2016 நவம்பர் 22) ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய இவர் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.
இவர் இந்தி மற்றும் போஜ்புரி இலக்கியங்களின் பிரபல இலக்கிய நபராக இருந்தார். இவர் காசிப்பூரில் உள்ள சோன்வானி கிராமத்தைச் சேர்ந்த பூமிகார் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் நன்கு அறியப்பட்ட இந்தி லலித் நிபந்தகரும் ஆவார்.[1] இவர் தனது எழுத்தின் மூலம் இந்திய அவசரநிலையை விமர்சித்தார்.[2] அதைப்பற்றிய குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளையும் வெளியிட்டார்.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]விவேகி ராய் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் காசிப்பூர் மாவட்டத்தின் பாரௌலி கிராமத்தில் பிறந்தார். இவர் சிறு குழந்தையாக இருந்தபோது தனது தந்தையை இழந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது தாய்வழி ஊரில் பெற்றார். இவர் தனது கிராமமான சோன்வானியில் ஆசிரியராக முதல் பணியினைப் பெற்றார். இருப்பினும், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் கர்திகாவின் சர்வோதயா இன்டர் கல்லூரிக்குச் சென்று இந்தி கற்பிக்கத் தொடங்கினார். கர்திகா கிராமம் தான் இவருக்கு ஒரு எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றுத் தந்தது. கர்திகாவில் சில ஆண்டுகள் கழித்து காசிபூரில் முதுகலை கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
விருதுகள்
[தொகு]இவர் உத்தரப் பிரதேச அரசிடமிருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். சோனமதி என்பது இவரது மிகவும் பிரபலமான புதினமாகும். இந்தி இலக்கியத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு 2001இல் மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்யாயன் விருதும், 2006இல் உத்தரப் பிரதேசத்தின் மதிப்புமிக்க யஷ் பாரதி சம்மன் விருதும் வழங்கப்பட்டது. இவருக்கு மகாத்மா காந்தி சம்மன் விருதினையும் உத்தரப் பிரதேச அரசு வழங்கியுள்ளது. ராய்க்கு வாரணாசியின் ஜகத்குரு ராமானந்தாச்சார்யா விருது 2012 சனவர் 14 அன்று வழங்கப்பட்டது.
இறப்பு
[தொகு]நீண்ட நோய்க்குப் பிறகு, ராய் 2016 நவம்பர் 22 அன்று இறந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ राजीवरंजन, विवेकी राय के निबंधों में जीवन-संवेदन, नवनिकष, विवेकी राय विशेषांक, (सम्पादन) लक्ष्मीकांत पाण्डेय, वर्ष-२, अंक-५, नवम्बर, २००८, पृष्ठ ३६-३९
- ↑ Mathur, O.P. (2004). Indira Gandhi and the emergency as viewed in the Indian novel. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-461-8.
- ↑ Datta, Amaresh Datta (1988). Encyclopaedia of Indian literature vol. 2. சாகித்திய அகாதமி. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0.
- ↑ "Notable Writer Dr. Viveki Rai Passes Away 15078199". Jagran.com. 2016-07-20. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
குறிப்புகள்
[தொகு]- Amaresh Datta, Mohan Lal, Encyclopaedia of Indian Literature : Navaratri-Sarvasena, சாகித்திய அகாதமி, 1991.